சொகுசு வாகனத்தில் சென்றவர் மீது துப்பாக்கி சூடு ; சம்பவ இடத்திலையே உயிரிழப்பு
அதிசொகுசு வாகனத்தில் பயணித்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வாகனத்தில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை பின்வத்தை பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை பிராடோ ரக வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் மீது , மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவத்தில் வாகனத்தில் பயணித்த நபர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Post a Comment