மருத்துவராக வருவதே எனது எதிர்கால இலட்சியம் - ஹன்சிகா சதீஸ்குமார்


மருத்துவராக வருவதே எனது எதிர்கால இலட்சிம் என  முல்லைத்தீவு மாவட்டத்தில் 180 புள்ளிகளை பெற்று முதல் நிலை பெற்ற மாணவி ஹன்சிகா சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்

மு/புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியால மாணவியான ஹன்சிகா சதீஸ்குமார் நேற்று முன்தினம் வெளியாகிய தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் 180 புள்ளிகளை பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளார் 

குறித்த மாணவி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தனக்கு கற்பித்த பெற்றோர் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் சக மாணவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு தான் வைத்தியராக வருவதே தனது எதிர்கால இலட்சிம் என தெரிவித்தார்.
ஜெகப்பிரஷாந்த்-முல்லை ஊடகவியலாளர்

No comments