ஏறாவூரில் சிசு சடலமாக மீட்பு ; சிறுமி உள்ளிட்ட இருவர் கைது!


 ஏறாவூர் பிரதேசத்தில் காணியில் சிசு ஒன்று சடலமாக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்ட நிலையில், சிசிவை பிரசவித்த 15 சிறுமி ஒருவரையும், அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில், டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்

ஏறாவூர் சுகாதாரதுறையில் டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிவரும் குறித்த நபர் அந்த பகுதியிலுள்ள வீடுகளை சோதனை செய்ய சென்ற வேளை, புதிய காட்டுப்பள்ளி வீதியில் உள்ள 15  வயது சிறுமியுடன் தொடர்பு ஏற்பட்டதையடுத்து சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார். 

கர்ப்பமாடைந்த சிறுமி பாடசாலை செல்வதை நிறுத்திய நிலையில் சம்பவதினமான நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை சிறுமி தனது வீட்டில் குழந்தையை பிரசவித்துள்ளார்.

பிறந்த சிசுவை சிறுமி, வீட்டின் முன்னாள் உள்ள  காணியில் வீசி எறிந்துள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமியையும், சிறுமியை கர்ப்பமாக்கிய டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றி வந்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் சடலமாக மீட்ப்பட்ட சிசுவை பிரேத பரிசோதனைக்காகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.  


No comments