கட்டுப்பணம் வைப்பிலிடுவதற்கான காலம் இன்றுடன் நிறைவு


உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை வைப்பிலிடுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைகிறது.

இதேவேளை, கட்டுப்பணத்தை வைப்பிலிட்ட நாள் முதல் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் சுமார் 15 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

அரச அதிகாரத்தை பயன்படுத்தியமை தொடர்பில் கணிசமான எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் இதுவரை கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

No comments