யாழ்பாணத்தில் மாண்டஸ் சூறாவளியால் 142 குடும்பங்கள பாதிப்பு


மாண்டஸ் சூறாவளியால் யாழ் மாவட்டத்தில் 142 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட உதவிப்பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா இது தொடர்பில் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்தில் 142 குடும்பங்களை சேர்ந்த 534 பேர் பாதிக்கப்பட்டுள்ளன. 2 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன. 98 வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன. 8 சிறு முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 உட்கட்டுமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 49 மாடுகள் இறந்துள்ளன. 58 ஆடுகள் இறந்துள்ளன என தெரிவித்தார்.


No comments