தாய்லாந்து போர்க்கப்பல் கவிழ்ந்ததில் 31 கடற்படையினரைக் காணவில்லை


தாய்லாந்து வளைகுடாவில் ஏற்பட்ட புயலின் போது 100க்கும் மேற்பட்ட கடற்படையினரைச் ஏற்றிச் சென்ற போர்க்கப்பல் கவிழ்ந்து மூழ்கியதில் 31 கடற்படையினரைக் காணவில்லை என தாய்லாந்து கடற்படை தெரிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மூழ்கிய கப்பல் பிரசுவாப் கிரி கான் மாகாணத்தில், பேங் சபானுக்கு கிழக்கே 32 கிமீ தூரத்தில் (20 மைல்) ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது.

கப்பலின் மின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் HTMS சுகோதை என்ற கடற்படைப் போர்க்கப்பல் கடலில் மூழ்கியது.

இன்று திங்கட்கிழமை அதிகாரிகள் 75 பணியாளர்களைக் காப்பாற்றியதாகக் கூறினர். ஆனால் 31 கடற்படையினரைக் கொந்தளிப்பான கடலில் காணவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்று 12 மணி நேரத்திற்கு மேல் கடந்துவிட்ட நிலையில், நாங்கள் தொடர்ந்து தேடுதல்களைச் செய்கின்றோம் என்று கடற்படை செய்தித் தொடர்பாளர் அட்மிரல் போக்ராங் மான்தார்ட்பாலின் கூறினார்.

விமானப்படை உதவியுடன் திங்கட்கிழமையும் இந்த நடவடிக்கை தொடர்ந்து வருகிறது. உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்க இரவு முழுவதும் தேடுத்தல் நடத்தப்பட்டு வருகிறது.

பேரழிவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் கடற்படை அறிவித்துள்ளது. எங்களுடைய வராலற்றில் செயற்பாட்டில் உள்ள கடற்படைக் கப்பலுக்கு இவ்வாறு நடந்தததில்லை என்று செய்தித் தொடர்பாளர் அட்மிரல் போக்ராங் மான்தார்ட்பாலின்  தெரிவித்தார்.


இது எங்கள் படையின் வரலாற்றில், குறிப்பாக இன்னும் செயலில் பயன்பாட்டில் உள்ள ஒரு கப்பலுக்கு இதுவரை நடந்ததில்லை" என்று 

மின்சக்தி இழந்ததால், உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (16:30 GMT) சுமார் 23:30 மணியளவில் கப்பல் கடலில் மூழ்குவதற்கு முன்,  கப்பலின் கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ள குழுவினர் போராடியிருந்தனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

கடற்படையினரை மீட்க மூன்று கடற்படைக் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் உதவிக்கு அனுப்பப்பட்டன. சுகோதாயின் பெரும்பாலான பணியாளர்களை போர் கப்பல் ஏற்றிச் சென்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.

லைஃப் ஜாக்கெட் அணிந்த மாலுமிகள் தண்ணீரிலும், லைஃப் ராஃப்டிலும் காணப்பட்டனர். 

படகில் உள்ள மருத்துவப் பணியாளர்கள் குழு உறுப்பினர்களை ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்வதைக் காட்டும் படங்களை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டன.

பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா, பேரழிவு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

ஹெச்டிஎம்எஸ் சுகோதை 1980களின் மத்தியில் அமெரிக்காவில் தாய்லாந்து கடற்படைக்காக உருவாக்கப்பட்டது.

No comments