வீதியில் கேக் வெட்டு:யாழில் சிறை!



தெல்லிப்பளை  வைத்திய அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்திய 10 பேரையும்  எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதோடு   கடமைக்கு இடையூறு விளைவித்தவர்களைஅடையாள அணிவகுப்புக்குட்படுத்துமாறும் யாழ் நீதிமன்ற பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்,

நேற்றிரவு 12 மணியளவில்  கோப்பாயில் இருந்து  வைத்திய அதிகாரி தனது காரில் கோப்பாய் வைத்தியசாலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது கோப்பாய் நாவலர் பாடசாலை முன்  உள்ள வீதியில் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வீதியினை மறித்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிக் கொண்டிருந்ததோடு    அதிகாரியின்  வாகனம்  பயணிப்பதற்கு இடமளிக்காது கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன்  வைத்திய அதிகாரியை தாக்கவும் முயற்சித்துள்ளனர்

 வைத்தியஅதிகாரி உடனடியாக பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து கோப்பாய் பொலிசார் விரைந்து  சட்ட வைத்திய அதிகாரியை பாதுகாப்பாக மீட்டதோடு கடமைக்கு இடையூறு விளைவித்த 10 இளைஞர்களையும்  கைது செய்ததோடு  இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியிருந்தனர் 

No comments