தெற்கு சண்டையில் கிழியும் கோவணங்கள்!



நல்லாட்சி கால முகமூடிகள் தற்போது பரஸ்பரம் அவர்களாலேயே கிழிக்கப்பட்டுவருகின்றது.

கோத்தாவின் சட்டத்தரணி அலி சப்ரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் முன்னாள் மனித உரிமை செயற்பாட்டாளர் சுதர்சன குணவர்தனவின் பிறந்தநாள் நடந்துள்ளதாக நல்லாட்சி காலத்தில் ஜெனீவாவில் தமிழ் மக்களது கோரிக்கைகளை கிடப்பில் போட வேலை செய்த சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி படகு கவிழ்ந்துவிடுமென தமிழ் மக்களது கோரிக்கைகளை முடக்க கூட்டு சேர்ந்தவர்களே தற்போது பிளவுண்டுள்ளனர்.

அதிலும் ஜெனீவா வரை சென்று இலங்கைக்கு முண்டுகொடுத்த ஒரு மாத கால நாடாளுமன்ற உறுப்பினரும் காலிமுகத்திடல் போராட்டத்தை காட்டிக்கொடுத்தவரெனவும் அடையாளப்படுத்தப்பட்ட சமன் ரத்னபிரியாவும் நிகழ்வில் பங்கெடுத்துள்ளார்.

கோத்தாவிற்கு வாக்களித்த 69 இலட்சத்துக்குள் இல்லாத ஒருவரும் போராட்டத்தின் பிதாமகன் என சொல்லிக்கொண்டவருமான சமன் ரத்னபிரிய அதிதியாக இருப்பது மிக மோசமான விடயம். கோத்தாவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்பதற்காக ரணில் போராட்டத்தை உருவாக்கினாரா என்ற கேள்வியை சகபாடிகள் போட்டுடைத்துள்ளனர்.

சுதர்சன தற்போது இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவராக ரணிலால் நியமிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது


No comments