நல்லூர் சூரசம்காரம்வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் நல்லையம்பதி அலங்காரக்கந்தன் தேவஸ்தானத்தின் கந்தசஷ்டி உற்சவத்தின்  ஐந்தாம் நாளான இன்று மாலை

சூரசம்காரம் பக்திபூர்வாக இடம்பெற்றது.

இவ் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாள் யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான முருகன் ஆலயங்களிலும் மிக சிறப்பாக விரத உற்சவ அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றன.

இவ் உற்சவ கிரியையினை ஆலயபிரதம குரு ஸ்ரீ  வைகுந்தன் சிவாச்சாரியர் நடாத்திவைத்தார்.

ஆலயத்திற்கு வருகைதந்த பக்தர்கள் மழையினையும் பொருட்படுத்தாது வழிபாடுகளில் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச் சென்றனர்.

கடந்த 26.10.2022 ஆரம்பித்துள்ள கந்தசஷ்டி விரதம் ஆறு நாளாக காணப்படுகின்றது. இவ்விரதம் இம்முறை 05வது நாளுடன் இனிதே நிறைவடைந்தது.

செய்தி - பு.கஜிந்தன்No comments