யாழ். புனித ஜோன் பொஸ்கோ பாடசாலை முன்பாக மலக்கழிவு வீச்சு!!

யாழ்ப்பாணம் புனித ஜோன். பொஸ்கோ பாடசாலைக்கு முன்பாக மனித மலக்கழிவு உள்ளிட்டவற்றை வீசியவர் தொடர்பில் பல்வேறு தரப்பிடமும்

முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை முன்பாக இன்றைய தினம் பம்பஸ் உள்ளிட்ட கழிவுகள் வீசப்பட்டிருந்தன. அதனால் பாடசாலைக்கு அருகில் வசிப்பவர்களும் பாடசாலை செல்லும் மாணவர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்திருந்தனர்.

அது தொடர்பில் மாநகர சபைக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் மாநகர சபை சுகாதார ஊழியர்கள் அவற்றை அகற்றும் போது, அதனுள் மோட்டார் சைக்கிள் காப்புறுதி அட்டை ஒன்று மீட்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கழிவுகளை அவரே வீசி இருக்கலாம் என சந்தேகிப்பதனால் அவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (செய்தி - பு.கஜிந்தன்)

No comments