வறுமை:இலங்கையில் பாலியல் தொழிலில் மாணவர்கள்!



இலங்கையில் தொடரும் நெருக்கடி காரணமாக  மாணவர்கள் பாலியில் தொழிலில் ஈடுபடுவது கண்டறிப்பட்டுள்ளது

 பாடசாலை செல்வதாகக் கூறி சிறுவர்கள் மசாஜ் மையங்களுக்குச் செல்வது குறித்து கவனம் செலுத்துமாறு ஆயுர்வேத திணைக்கள ஆணையாளர் பெற்றோர்களிடமும் அதிபர் ஆசிரியர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார் .

கடந்த மூன்று மாதங்களில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை நேரங்களில் மசாஜ் நிலையங்களின்  சேவைகளை வழங்கச் செல்வது தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.


பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி  இவ்வாறான இடங்களுக்கு மாணவர்கள் செல்வதாக அறியமுடிகிறது. இவ்வாறான வர்த்தகங்களை நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இந்த வர்த்தகங்களை ஒழுங்குபடுத்தும் பொறுப்பும், உள்ளது . எனவே இது தொடர்பில் உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருவதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் நடவடிக்கைகள் குறித்து அதிக வேண்டும் என்றும் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது, ​​ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் மஹரகம பிரதேச செயலகப் பகுதிகளில் பெரும்பாலான மசாஜ் நிலையங்கள் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது .

No comments