கௌரிசங்கரியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் தலைவர்கள்

கடந்த வருடம் ஆவணி மாதம் 23ம் திகதி, கொரோனா பெருந்தொற்றுக்குள்ளாகி உயிர்நீத்த ஜனாதிபதி சட்டத்தரணி

கே.வி.தவராசாவின் மனைவியும், மூத்த சட்டத்தரணியுமான கௌரிசங்கரியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் யாழிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கௌரிசங்கரியின் நினைவாக நினைவு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் ஆய்வாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சமயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். (பு.கஜிந்தன்))

No comments