இலங்கையில் அரச பணியாளர்களிற்கு அரை சம்பளமாம்?
 

இலங்கையில் அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவிக்கின்றார்.

அரசாங்கத்திடம் பணம் இல்லாததே இதற்குக் காரணம் என இணையச் சேனல் ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.

ஏற்கனவே செப்டம்பர் மாதத்திற்கான அரச பணியாளர்களிற்கான சம்பளத்தை வழங்கமுடியாது இலங்கை அரசு திணறியமை குறிப்பிடத்தக்கது.

No comments