மாற்றமடைந்து வரும் நிலவரத்தை உன்னிப்பாக அவதானிக்கிறோம் - பிரித்தானியா


இலங்கையில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை உட்பட வேகமாக மாற்றமடைந்து வரும் நிலவரத்தை உன்னிப்பாக அவதானிப்பதாக பிரித்தானியாவின் வெளிவிவகார பொதுநலவாய இணை அமைச்சர் அமன்டா மில்லிங் தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள தற்போதையஅரசியல் பொருளாதார சவால்களிற்கு அனைத்து தரப்பினரையும் ஜனநாயக ரீதியில் அமைதியான அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய தீர்வை காணுமாறு ஊக்குவிக்கின்றது. அனைத்து தரப்பினரையும் சட்டத்தின் ஆட்சியை மதிக்குமாறும் வன்முறைகளை பின்பற்றவேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அரங்கில் இலங்கையின் கடன்நெருக்கடிக்கான தீர்வுகள் குறித்து பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து செயற்படுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments