கைத்தொலைபேசி கையளிக்காவிட்டால் சிறை!காலிமுத்திடல் போராட்டகாரர்களை தாக்க உத்தரவிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் டான் பிரியசாத் ஆகியோரின் கையடக்க தொலைப் பேசிகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மே மாதம் 9 ஆம் திகதி கோட்டா கோ கம போராட்டக்களத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த மூவரும் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இவர்கள் கையடக்க தொலைப் பேசிகளை கையளிக்கும் வரை நீதிமன்றில் தடுத்து வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலான கமகே மேலும் உத்தரவிட்டுள்ளார்.


குறித்த கையடக்க தொலைப் பேசிகளை கையளித்த பின்னர் குறித்த சந்தேக நபர்களை விடுவிக்குமாறும் நீதவான் இதன்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments