தேர்தலிற்கு தயாராகின்றது பொதுஜனபெரமுன!அடித்து விரட்டப்பட்ட போதும் அடுத்த உள்ளுராட்சி தேர்தலிற்கு பொதுஜனபெரமுன தயாராகின்றது.

 நாடளாவிய ரீதியில் உள்ள தமது அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உப தலைவர்களை கொழும்புக்கு அழைத்து கலந்துரையாடல்களை நடத்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

இந்த கலந்துரையாடல் இன்று 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால அரசியல் விவகாரங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.


No comments