பொதுநலவாய விளையாட்டுப் போட்டி! இலங்கையைச் சேர்ந்த 10 பேர் மாயம்!


பொதுநலவாய போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரித்தானியா பேர்மிங்காமில் சென்றுள்ள இலங்கை அணியின் 10 பேர் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் மாயமாகியுள்ளதாக ஏஎவ்பி இடம் உயர் விளையாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒன்பது தடகள வீரர்களும் ஒரு மேலாளரும் தங்கள் போட்டிகள் முடித்த பிறகு காணாமல் போனார்கள் என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி கூறினார்.

வேலைவாய்ப்பைப் பெற அவர்கள் இங்கிலாந்தில் இருக்க விரும்புவதாக நாங்கள் சந்தேகிக்கிறோம் என்றார்.

அவர்களில் மூவர்  ஜூடோகா சமிலா திலானி, அவரது முகாமையாளர் அசேல டி சில்வா மற்றும் மல்யுத்த வீரர் ஷனித் சதுரங்க ஆகியோர் கடந்த வாரம் காணாமல் போயிருந்தனர்.

ஜூடோ வீரர் மற்றும் பயிற்சியாளரின் இருப்பிடத்தை காவல்துறை கண்டுபிடித்தாலும், அவர்களுக்கு 180 நாட்கள் விசா காலம் இருந்ததால் அவர்கள் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

No comments