மட்டு நாவற்குடாவில் ஆணின் சடலம் மீட்பு!


மட்டக்களப்பு நாவற்குடா பொதுச் சந்தைக்கு அருகில் இன்று திங்கட்கிழமை (18) சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில், நாவற்குடா இந்து கலாசார நிலையத்துக்கு முன்னால் பொதுச் சந்தைக்கு அருகில் மீட்கப்பட்ட இந்த ஆணின் சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments