நேர்மையான, திறமையான ஜனாதிபதி, பிரதமரை தேர்ந்தெடுங்கள் கத்தோலிக்கப் பேரவை


அரசியல் வேறுபாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நேர்மையான மற்றும் அனைவரின் நம்பிக்கையையும் பெறக்கூடிய ஒரு இடைக்கால ஜனாதிபதி மற்றும் பிரதமரை நியமிக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்த கருத்துக்கு வருமாறு கத்தோலிக்க ஆயர்கள் பேரவை இன்று வலியுறுத்தியுள்ளது.

அத்தகைய இடைக்கால ஜனாதிபதியும் பிரதமரும் இல்லாதது நாட்டின் நிலைமையை மேலும் மோசமாக்கும், மேலும் மக்கள் தெரிவு செய்யப்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் நம்பிக்கை இழக்க நேரிடும்” என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெரேரா மற்றும் செயலாளர் நாயகம் அருட்தந்தை அந்தோணி ஜெயக்கொடி ஆகியோர் கையொப்பமிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தி தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் பொதுத் தேர்தலுக்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் ஆயர்கள் பேரவை கேட்டுக் கொண்டது.

நாடு பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளது. இது நமது தாய்நாட்டை முற்றிலுமாக முடக்கியுள்ளது. நாட்டிற்குத் தேவையானது உடனடி தீர்வு மற்றும் அதை மீண்டும் பாதையில் கொண்டு வர நீண்ட மற்றும் குறுகிய கால தீர்வுகளை உருவாக்குவது. அரசியல் ஸ்திரமின்மை இருப்பதால். மத்தியில் இடைக்காலத் தலைமை அமைக்கப்பட வேண்டும்.அரசியல் அதிகாரத்திற்கான முறுகல் நிலை தோன்றியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் இன்னும் ஒருமித்த கருத்துக்கு வரவில்லை புதிய ஜனாதிபதியும் பிரதமரும் ஒருமித்த அரசாங்கமே காலத்தின் தேவை. குறிப்பிட்ட காலம் நிராகரிக்கப்பட்ட தலைவர்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படக் கூடாது என்று ஆயர்கள் பேரவை மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments