இந்தியாவால் சீனா உதவ மறுக்கிறது:ரணில்!

 


தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஒன்றரை  வருடங்கள் செல்லும் என்று  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கைக்கு சீனா ஓரளவு உதவுவதாகத் தெரிவித்த பிரதமர், இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதால் கிடைக்க வேண்டிய பிரதான உதவிகள் கிடைக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

எனவே, நன்கொடையாளர் மாநாட்டில் சீனாவுடன் ஓர் உரையாடலை மேற்கொள்ள முயல்வதாகவும் விரைவில் அதை நடத்த விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய மாற்றத்தை மேற்கொள்ள விடுக்கப்பட்ட கோரிக்கையை சீனா நிராகரிப்பதாக தெரிவித்த நிலையில், இலங்கைக்கு உதவ இந்தியா முன்வந்ததாக பிரதமர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பிணை எடுப்பதை அரசாங்கம் நாடுகிறது என்றாலும், நடந்துகொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நன்கொடையாளர் முகவர் மற்றும் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

No comments