முள்ளிவாய்க்கால் நோக்கிப் புறப்பட்டது கிழக்கு பேரணி!

முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர்நீர்த்தவர்களுக்கு நீதிகோரி கிழக்கிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரணிக்கு ஆதரவு வழங்க தமிழ் இளம் சமூகம் முன்வரவேண்டும் என வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் அம்பாறை மாவட்ட தலைவி திருமதி தம்பிராஜா செல்வராணி தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் படுகொலை வாரத்தினை முன்னிட்டு படுகொலைசெய்யப்பட்டவர்களுக்கு நீதிகோரி பொத்துவிலிலிருந்து ஆரம்பமான பேரணியானது இன்று மாலை மட்டக்களப்பினை வந்தடைந்தது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் முள்ளிவாய்க்காலில் இன்னுயிர்களை ஈத்த உறவுகளுக்கான முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் அனுஸ்டிக்கப்பட்டுவருவதுடன் இன்று பொத்துவிலில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையில் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேரணியானது இன்று மாலை மட்டக்களப்பு கல்லடியை வந்தடைந்ததும் கல்லடி பாலம் வரையில் ஊர்வலம் நடைபெற்றதுடன் நாளை காலை மீண்டும் திருகோணமலை நோக்கி கல்லடி பாலத்திலிருந்து ஊர்வலம் ஆரம்பாகவுள்ளது.

நாளை கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பமாகும் பேரணியானது வாகரை ஊடாக திருகோணமலையினை சென்றடைந்து அங்கிருந்து முள்ளிவாய்க்காலை எதிர்வரும் 18ஆம் திகதி சென்றடையும்.

No comments