எங்களின் தீர்மானம் குறித்து செவ்வாயன்று இறுதி முடிவு - சுமந்திரன்
ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படும் சிறீலங்கா அதிபர் கோட்டாபாயவுக்கு எதிரான குற்றவியல் பிரேரணை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியவை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை எடுக்கப்படவுள்ளது என தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
சிறீலங்கா அதிபருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
இதன்போது கூட்டமைப்பு இந்தப் பிரேரணைகள் தொடர்பில் எடுக்கவுள்ள தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி செய்யப்படவுள்ளது என சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment