ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான எரிவாயுவை நிறுத்தியது ரஷ்யா


ரஷ்ய நாணயமான ரூபிளில் பணம் செலுத்தத் தவறியதால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான கச்சாய் எண்ணெய் மற்றும் எரிவாயுவை திடீரென நிறுத்தியுள்ளது ரஷ்யா. 

குறிப்பாக போலாந்து, பல்கிரியாவுக்கு வழங்கிவந்த கச்சா எண்ணெய், எரிவாயுவை ரஷ்யா இன்று புதன்கிழமை (27) அதிரடியாக நிறுத்தியுள்ளது. இச்சம்பவம் சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் அரசு நிறுவனமான கேஸ்புரொம் போலாந்தின் அரசு நிறுவனமான பிஜிஎன் இங் மற்றும் பல்கிரியாவின் அரசு நிறுவனமான பல்கர் கேஸ் நிறுவனங்களுக்கு வழங்கி வந்த எரிவாயுவை இன்று அதிரடியாக நிறுத்தியுள்ளது.


ரஷ்யாவின் இந்த அறிவிப்பால் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்கும் ஜேர்மனி, போலாந்து, பல்கிரியா, ஹங்கேரி, ஆஸ்திரியா உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சியடைந்தன.

ரூபிளை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்குமாறு ரஷ்யா அறிவித்த போதும் பல ஐரோப்பிய நாடுகள் அதை பின்பற்றாமல் தொடர்ந்து அமெரிக்க டொலரிலேயே ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள சிறப்பு இராணுவ நடவடிக்கையில் போலந்து ஊடாகவே அமொிக்கா தலைமையிலான மேற்குலத்தினதும் நேட்டோவின் இராணுவ தளபாட விநியோகங்கள் உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது. போலந்து அரசாங்கமும் உக்ரைனுக்காக பல வகையிலும் ஆயுத மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

அதேபோன்று பல்கோியாவும் ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் போராட மூன்றாவது நாடு ஊடாக ஆயுத தளபாடங்களை வழங்கி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


No comments