இமானுவேல் மக்ரோன் வெற்றி பெற்றார்


இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 44 வயதுடைய தற்போதைய அதிபர் இம்மானுவேல் மக்ரோன் 58.8 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இவர் இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தீவிர வலதுசாரிப் போட்டியாளரான 53 வயதான மரைன் லு பென் 41.2 விழுக்காடு வாக்குகளைப் பெற்றார். கடந்த 50 ஆண்டுகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் தீவிர வலதுசாரி கட்சி அதிகமான வாக்கு விகிதத்தை பெற்றது. லு பென் தனது தோல்வியை அதிகமான வெற்றி என்று விவரித்தார் 

No comments