காணவில்லை: கண்டால் தகவல் தரவும்!


கந்தளாய் - மதுரசா நகர், இல -  163/1 பேராறு பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய  என். ரபிஸ்  என்ற மூன்று குழந்தைகளின் தந்தை காணாமல் போயுள்ளார்.

ஒரு வாரமாக மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை காணவில்லையென கந்தளாயில் காவல் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவர், கடந்த வெள்ளிக்கிழமை  4ஆம் திகதி அதிகாலையிலிருந்து காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்  கடைசியாக அணிந்திருந்த  சிகப்பு நிற டி-சேட் அணிந்திருந்ததோடு   EP UU-4187 இலக்கத் தகடுடைய   200 பல்சர் மோட்டார் வண்டியுடன்  காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவரை யாராவது  கண்டால் அறியத்தருமாறு அவரது  தந்தை நசார் கேட்டுள்ளார். 

No comments