உக்ரைன் நாட்டை ரஷ்யா இரண்டாக துண்டாக்கலாம் - உக்ரைன்


உக்ரைன் நாட்டை ரஷ்யா இரண்டு துண்டாக பிரிக்கலாம் என்று உக்ரைன் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனை முழுமையாக கைப்பற்ற முடியாததால் நாட்டை இரண்டு துண்டாக பிரிக்க ரஷ்ய அதிபர் திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் உளவுத்துறை தலைவர் கிய்லொ படனொவ் தெரிவித்துள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் உள்ள வடகொரியா, தென்கொரியா போன்று உக்ரைனை இரு துண்டாக பிரிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது. உக்ரைனின் முழுமையான பகுதிகளை கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்த புதின் நாட்டை இரண்டாக பிரிக்க திட்டமிட்டுள்ளார் என்றார்.  

No comments