நல்லெண்ணம்:மேலும் 11 இந்திய மீனவர் விடுதலை!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடந்த மாதம் 8ஆம் திகதி கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த 11 இந்திய மீனவர்களும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 11 மீனவர்களையும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜெ.கஜநிதிபாலன் விடுவித்து விடுதலை செய்தார்.

மீனவர்களுக்கு 18 மாத சிறைத்தண்டனையை 10 மாதங்கள் ஒத்திவைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளது.

குறித்த மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மூன்று படகுகள் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 27ஆம் தேதி தவணையிடப்பட்டுள்ளது

No comments