பிசுபிசுக்கிறது நட(ன)மாடும் சேவை!



பெரும் பிரச்சாரங்களுடன் வவுனியாவில் இடம்பெற்ற வடமாகாண சபையின் நடமாடும் சேவை தோல்வியில் முடிவுற்றுள்ளது.

பெரும்பாலும் அதிகாரமற்ற திணைக்கள தலைவர்களை குந்தியிருந்து விருந்துண்ண மட்டுமே நடமாடும் சேவை உதவியுள்ளது.

குறிப்பாக ஆளுநர் மற்றும் பிரதம செயலாளர் திறப்புவிழாவுடன் சென்றுவிட பின்னர் வெறுமனே பொழுதுபோக்கு கூட்டமென கூடிக்கலைந்துள்ளது நடமாடும் சேவை.

இதனிடையே மத்திய அரசின் காணி தொடர்பான நடமாடும் சேவையும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. தமிழ் மக்கள் இச்சேவையிலே நம்பிக்கை அற்றுப்போய் இருக்கின்றார்கள். 

அத்துடன், வட மாகாண காணி ஆணையாளருக்கு, இந்தக் காணி பிரச்சினையை தீர்ப்பதற்கான காணிக்கச் சேரியை நடத்துவதற்கு தாங்கள் அதிகாரம் வழங்கியிருப்பதாக சொல்லியிருக்கின்றார்கள். அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. அப்படி அதிகாரம் வழங்கியிருந்தால், வட மாகாண காணி ஆணையாளர் எமது மக்களின் பிரச்சனைகளை உண்மையில் தீர்த்திருக்கவேண்டும். காணிக் கச்சேரியை நடத்தியிருக்கவேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு.“குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கில் தான் காணி பிரச்சினைகள் தீர்க்காமல் இருப்பதான குற்றச்சாட்டை அமைச்சர் முன்வைத்துள்ளார். உண்மையில் அது எமக்கு ஒரு தலைகுனிவுதான்.


“இந்த நடமாடும் சேவை என்பது ஏமாற்றுகின்ற விடயமாகதான் இருக்கிறது. காணிப் பிரச்சினைகளை முழுமையாக காணி அமைச்சே கையாளவேண்டும்.“ஆகவே, பிரதேச செயலகங்களில் மக்கள் சென்று களைப்படைந்த நிலையில் மீண்டும் அதே அதிகாரிகளை எமது மக்கள் சந்தித்துப் பேசுவதென்பது தீர்வாகாது” என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.


No comments