யாருடைய உடலங்கள்?யாழ்பாணம் கடற்பரப்பில் தொடர்ச்சியாக அநாதரவாக ஒதுங்கிவருகின்ற உடலங்கள் தொடர்பில் அச்சம் எழுப்பப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கட்டைக்காடு பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

அண்மையில் வடமராட்சி கிழக்கு மணல்காடு, வல்வெட்டித்துறை, ஆகிய பகுதியில் சடலங்கள் கரையொதுங்கியிருந்த நிலையில்   மேலும் ஒரு சடலம் கரை இன்று ஒதுங்கியுள்ளது. 

கடந்த ஒரு வாரத்தினுள் யாழ் மாவட்டத்தில் கரையொதுங்கிய நான்காவது சடலம் இதுவாகும்.

யாழ்ப்பாணம் மாவட்ட வல்வெட்டித்துறை மணல்காடு பகுதிகளில்   இரு  உடலங்கள் கரை ஒங்கிய நிலையில் நெடுந்தீவிலும் ஓர் உடலம்;  கரை ஒதுங்கியிருந்தது.

எனினும் கரை ஒதுங்கும் உடலங்கள் யாருடையது என்பது இது வரையில் அடையாளம் காணப்படாதமையினால் பெரும்  சந்தேகம் நிலவுகின்றது.

அண்மைய கடற்கொந்தளிப்பால் பாதிக்கப்பட்ட மீனவர்களது உடலங்களாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்ற போதும் இதுவரை தமிழகத்திலிருந்தோ இலங்கையிலிருந்தோ முறைப்பாடுகள் ஏதும் கிட்டியிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


No comments