காணாமல் போன தமிழக மீனவர் சடலமா மீட்பு


யாழ்ப்பாணம், காரைநகர் - கோவளம் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் படகு மோதியதில் ஒருவர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை  இடம்பெற்றது.

இந்நிலையில் காணாமல்போன இந்திய மீனவர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்களின் ரோலர் படவை கடற்படையினர்  திங்கட்கிழமை இரவு முற்றுகையிட்டுள்ளனர். இதன்போதே கடற்படையின் படகு இந்திய மீனவர்களின் படகு மீது மோதியுள்ளது.

சம்பவத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தில் இருந்து ராஜேஸ்குமார் என்பவருக்கு சொந்தமான படகு காரைநகர் - கோவளம் கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதி ஊடாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் படகை முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது கடற்படை படகு மோதி ரோலர் படகு கடலில் மூழ்கியுள்ளது. படகில் இருந்து 3 மீனவர்கள் கடலில் மூழ்கியுள்ளனர். 

எனினும் இரு மீனவர்கள் இலங்கை கடற்படையினால் மீட்கப்பட்டுள்ளபோதும் ஒரு மீனவர் கடலில் மூழ்கி காணாமல்போயிருந்த நிலையில் அவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளா்.

ஏனைய இருவரையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments