யாழிலும் சுடலையிலும் நெருக்கடி!

 


கொரோனா தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் உடலங்களை தகனம்  செய்வதற்கு யாழ்ப்பாணத்திலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனிடையே யாழ்ப்பாணம் கோம்பயன் மணல் மின் தகன மயானத்தில் தகனம் செய்யப்பட்டு வருகின்றனர்.ஆயினும் மயானத்தில் நாளொன்றுக்கு 5 உடல்கள் தகனம் செய்யப்பட்டு வருவதாக யாழ்.மாநகர முதல்வர் விசுவலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

தற்போது எதிர்வரும் 8ம் திகதிவரை உடலங்களை எரிப்பதற்கான முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனால் வைத்தியசாலைகளில் அதிகளவிலான உடலங்கள் தேங்கி காணப்படுகின்றது.

நாளொன்றுக்கு அதிகளவிலான உடலங்களை எரியூட்டுவதற்கான தகமை எம்மிடம் இல்லை. அதையும் மீறி நாங்கள் ஒன்று இரண்டு உடலங்களை கூடுதலாக ஏரியூட்டும் போது குறித்த ஏரியூட்டி அடிக்கடி பழுதடைய கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments