கேள்வி நடைமுறையிலேயே நெடுந்தீவு!யாழ்ப்பாணத்தின் நயினாதீவில் மின் உற்பத்திக்கான முயற்சிகள் சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமை வழமையானதொரு கேள்வி கோரல் நடைமுறையாகுமென வடமாகாண ஆளுநர் எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கேள்வியொன்றிற்கு பதிலளித்த அவர் இதன் பின்னணியில் அரசியல் ஏதுமில்லையெனவும் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் கேள்வி கோரப்பட்ட போது விண்ணப்பித்த நிறுவனங்களில் சீன நிறுவனமொன்றே பொருத்தமான ஒப்பந்தகாரராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments