சர்வதேச கட்டுப்பாடு என்கிறார் சி.வி!



 தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பல விடயங்கள் பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்  கவனத்தில் கொள்ளவில்லை என்பது மனவருத்தத்தைத் தருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

மக்களை வேவு பார்ப்பது அவர்களை அச்சுறுத்துவது மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை, பத்திரிகையாளர்களை, காணாமல் போனோரின் குடும்பத்தவர்களை குறிவைத்து அவர்களை நீதிமன்றில் நிறுத்துவது போன்ற செயற்பாடுகள் தற்போது விரிவடைந்துள்ளது. மாணவர்களை, கல்வியாளர்களை, மருத்துவர்களை ஏன் மதத் தலைவர்களையும் அரசாங்கம் கண்காணிக்கத் தொடங்கியுள்ளது என்பதையும் ஆணையாளர் கூறியுள்ளார்.

இலங்கை அரசு நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், மனித உரிமைகள் பற்றிப் பேசினால் மட்டும் போதாது நடைமுறையில் முன்னேற்றத்தைக் காட்ட வேண்டும் என்றுமுள்ளார். 

மூன்றாவதாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளை உடனே தற்காலிகமாகவேனும் செயலிழக்க வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்;;.

நாம் எதிர்பார்த்த பல விடயங்கள் கூறப்படாமல் விட்டாலும் தற்போதைக்கு இலங்கை அரசாங்கத்தை சர்வதேச கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளார். அரசாங்கமும் வேறு வழியின்றி அதற்கு இசைந்துள்ளதெனவும் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


No comments