மீண்டும் தாயகத்தில் காணாமல் போதல்கள்!திருகோணமலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியொருவர் ஆயுதமுனையிவ் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யுத்தத்தின் இறுதி காலத்தில் கைதாகி இலங்கை இராணுவத்தின் புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விடுதலையான திருகோணமலை வரோதயன் நகரை சேர்ந்த் மனோகரதாஸ் சுபாஸ் (39) என்பவரே கடத்தப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் உப்புவெளி காவல்நிலையத்திலிருந்து வந்திருந்ததாக கூறப்பட்டவர்களால் இன்று காலை துப்பாக்கி முனையில்  கடத்தப்பட்டுள்ளார்.

எனினும் இதனை இலங்கை காவல்துறை மறுத்துள்ளதுடன் அவ்வாறான கடத்தல் ஏதும் நடைபெறவில்லையென தெரிவித்துள்ளது.இதனிடையே கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டிலிப்பாயில் வசித்து வருபவரான மாணிக்கம் ஜெயக்குமார் (வயது 51) என்பவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments