யாழிலும் தடை பெற்றது இலங்கை காவல்துறை!

மட்டக்களப்பினை தொடர்ந்து யாழ்.நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க யாழ்ப்பாண காவல்துறையினர்; இன்றைய தினம் வியாழக்கிழமை நீதிமன்ற தடையுத்தரவை பெற்றுள்ளனர் .

இதனையடுத்து தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு தடை உத்தரவு வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை பிற்பகல் இந்தத் தடை உத்தரவு காவல்துறையால் பெறப்பட்டுள்ளது.

நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில், எதிர்வரும் 26ஆம் திகதிரை நடத்த ஏற்பாடாகியுள்ள 34ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதித்து உத்தரவிடுமாறு யாழ்ப்பாணம் தலைமையக காவல்துறையினரால் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

இதனிடையே காவல்துறையால் பெறப்பட்ட தடைக்கட்டளையில் எவரது பெயரும் குறிப்பிடப்படவில்லையென தெரியவந்துள்ளது.


No comments