இலங்கை:வீட்டிலும் மாஸ்க்?

இலங்கையில் டெல்டா வைரஸ் திரிபு வேகமாக பரவுகின்றமையால், பொதுமக்கள் வீட்டிலும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமானதாகும் என விசேட வைத்தியர் தீபால் பெரேரா கோரியுள்ளார்.

வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு 15 விநாடிகள் என்ற சிறிதளவான காலமே எடுக்கும் என்பதானால், அந்தக் காலப்பகுதிக்குள் ஒருவருக்கு தொற்று ஏற்படக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில், இயன்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் விசேட வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே கொவிட் தொற்றாளர்களுக்கு தேவையான மேலதிக ஒக்சிசனை கொண்டுவருவதற்காக இலங்கையிலிருந்து இந்தியா நோக்கி கப்பலொன்று சென்றுள்ளது.

இலங்கை கடற்படைக்கு  சொந்தமான ‘சக்தி’ என்ற கப்பலே இவ்வாறு திருகோணமலை துறைமுகத்திலிருந்து  சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


இதேவேளை 100 டொன் ஒக்சிசனை இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளது


No comments