சிங்கமொன்று புறப்பட்டதே: சிங்கக்குட்டியோடு..!பாராளுமன்றில் வீராவேசப்பேச்சுக்களால் களை கட்டிக்கட்டும் தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் மறுபுறம் தங்கள் அலுவல்கள் நிறைவேற ஆட்சியாளர்களுடன் பின்கதவு உறவை வைத்திருப்பதாக நாமல் ராஜபக்ச அண்மையில் கூட்டமைப்பினரை பார்த்து சொன்ன நையாண்டி அனைவரும் தெரிந்ததே.

வெளியே ஊடகங்கள் முன்னாலும் மக்கள் மேடைகளிலும் வீரங்கொப்பளிப்போர் பின்னால் காரியம் ஆகவேண்டுமெனில் ஆட்டுக்குட்டிகளாக அடக்கி வாசிப்பது தெரிந்ததே.

அவ்வகையில் அண்மையில் மீண்டும் நாடாளுமன்றம் எட்டிப்பார்த்த தமிழ் தேச நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கிளிநொச்சி வந்த சொகுசு காரில் எட்டிப்பார்த்த வாளேந்திய சிங்க குட்டியை தெறிக்கவிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

ஆனாலும் சொகுசு கார் வாங்குகையில் கண்ணாடியில் ஒட்டப்பட்ட சிங்கக்குட்டியை அகற்றவில்லையாவெனவும் நெட்டிசன்கள் கேள்வி கேட்டு தாக்கிவருகின்றனர். 
No comments