முன்னாள் அரசியல் கைதி விசாரணையில்!வவுனியா தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்மன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அவருடைய வீட்டிற்கு   சிவில் உடையில் வருகை தந்தவர் விசாரணை பிரிவினர் வவுனியாவிலுள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவிற்கு எதிர்வரும் 10ம் திகதி வருகை தருமாறு அழைப்பாணையினை  கையளித்து சென்றுள்ளனர். 

ஏற்கனவே மட்டக்களப்பில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணி பேரியக்க செயற்பாட்டளர் மற்றும் ஊடகவியலாளர் என பலரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம்  பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments