வவுனியா:மரணவீட்டிற்கு சென்ற 28பேருக்கு கொரோனாவவுனியா – ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் கலந்து கொண்ட 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இம்மாதம் 24 ஆம் திகதி வவுனியா – ஒலுமடு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள பட்டடைபிரிந்தகுளம் பகுதியில் மரணச்சடங்கு ஒன்று இடம்பெற்றது. பின்னர் அவரது குடும்ப உறுப்பினர் இருவருக்கு சுகவீனம் ஏற்பட்டதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனாதொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
No comments