ஜோசப் ஸ்டாலின் குழு விடுதலை!இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் கேப்பாபிலவு விமான படை தளத்தின் தனிமைப்படுத்தலில் இருந்து இன்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு, விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்படடிருந்த இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தி போராட்டங்கள் பல மட்டங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்த நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் இலங்கை ஆசிரியர்சங்கத் தலைவர் பிரியந்த பர்னாந்து தலைமையில்,கேப்பாபுலவு வருகை தந்திருந்த குழுவினர் ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினர் தனிமைப்படுத்தலிலுள்ளவர்களைப் பார்வையிட அனுமதித்திருக்கவில்லை.

இந்நிலையில் இன்று விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலும்,நுவரெலியா மற்றும் கொழும்பில் ஜனாதிபதி மாளிகை முன்னதாகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே தொழிற்சங்க பிரதிநிதிகள் இன்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளனர்


No comments