முல்லையில் காணாமல் போன மாணவன் வீடு திரும்பினான்!முல்லைத்தீவு- துணுக்காய், உதயசூரியன் நகரில் காணாமல் போன பாடசாலை மாணவனான விஜயகுமார் விதுசன் வீடு திரும்பியுள்ளான்.

இதனையடுத்து மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் அவரது பெற்றோரினால் காணாமல் போனமை தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடு விலக்கப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் குறித்த மாணவன், வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றில்  நீராடுவதற்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

இவ்வாறு  சென்ற மாணவன், நீண்ட நேரமாக வீடு திரும்பாதமையினால், அவரது பெற்றோர்கள்,  கிணற்றிற்கு சென்று பார்த்தப்போது, அவர் எடுத்துச் சென்ற உடைகள் மாத்திரம் அங்கு கிடந்துள்ளது.

மேலும் அம்மாணவன் எடுத்துச் சென்ற சவர்க்காரம் மாங்குளம் துணுக்காய் வீதியில் அவரின் வீட்டுக்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்துள்ளது.

இதனால் குழப்பமடைந்த பெற்றோர் உடனடியாக பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்தினர்.

இந்நிலையில் இன்று மாலை மாணவன் வீடு திரும்பியுள்ளான்.எனினும் அவன் காணாமல் போனமை தொடர்பான தகவல்கள் வெளியாகியிருக்கவில்லை. 


No comments