கசிப்பிடம் முற்றுகை! ஒருவர் கைது!!


திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  ஈச்சத்தீவு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்கையிடப்பட்டதில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 31 வயதுடைய குறித்த பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

கிண்ணியா பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பெர்ணாந்துவின் ஆலோசனைக்கு அமைய கிண்ணியா பொலிஸார் நேற்றைய தினம் கசிப்பு உற்பத்தி நிலையத்தை சுற்றி வளைத்துள்ளனர்.

இதன்போது கசிப்பு மற்றும் கோடாத் திரவமும் அடங்கிய 7 பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

No comments