2,160 கி.மீ பயணம் செய்த காண்டா மிருகம்!!


ஆப்பிரிக்காவில் வாழும் வெள்ளை நிற காண்டா மிருகங்கள் அழியும் நிலையில் உள்ளன.

இந்த விலங்கினத்தை காப்பாற்றுவதற்கு தீவிர முயற்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் தைவான் நாட்டில் உள்ள உயிரியல் பூங்காவில் 5 வயதான என்மா என்ற பெயருடைய வெள்ளை பெண் காண்டா மிருகம் இருக்கிறது.

அது இனப்பெருக்கம் செய்வதற்கு தைவானில் ஆண் காண்டாமிருகம் இல்லை. எனவே அதனை ஜப்பான் நாட்டுக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். ஜப்பானில் டொபு உயிரியல் பூங்காவில் மொரான் என்கிற 10 வயது காண்டாமிருகம் உள்ளது.

அதனுடன் ஜோடி சேர்வதற்காக என்மா காண்டாமிருகத்தை ஜப்பானுக்கு விமானத்தில் அழைத்து சென்றுள்ளனர்.

ஜப்பானுக்கும் தைவானுக்கும் இடையே உள்ள தூரம் 2,160 கி.மீ. ஆகும். ஆனாலும் காண்டாமிருகம் ஜோடி சேர வேண்டும் என்பதற்காக அங்கு அழைத்து சென்றுள்ளனர்.

சில மாதங்கள் இரு காண்டாமிருகங்களும் ஒன்றாகவே இருக்கும். கர்ப்பம் அடைந்ததும் காண்டாமிருகத்தை தைவானுக்கு அழைத்து செல்வார்கள்.

வெள்ளை காண்டாமிருகங்கள் தற்போது தென்ஆப்பிரிக்க காடுகளில் அதிகமாக காணப்படுகின்றன. இப்போது 18 ஆயிரம் வெள்ளை காண்டாமிருகம் மட்டுமே காடுகளில் இருக்கிறது.

No comments