ரணிலுக்கு சரியான ஜோடி சம்பந்தரே!ரணில் விக்ரமசிங்கவின் ஆசனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தனுக்கு அருகில் மாற்றுமாறு யோசனை முன்வைத்துள்ளார்  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அருகில் நாடாளுமன்றத்தில் அமர முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்கு நாளை வருகை தர உள்ளார்.

இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கவின் ஆசனம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அடுத்ததாக ஒதுக்கப்பட்டுள்ளது.

எனினும் ரணில் விக்ரமசிங்கவிற்கு அருகில் அமர முடியாது என நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது அந்த குமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்

தனது ஆசனத்தை அத்துரலியே ரத்தன தேரர் அல்லது இரா சம்பந்தன் ஆகியோரது ஆசனத்திற்கு அருகில் மாற்றம் கோரிக்கை கொடுத்துள்ளார்

இல்லையெனில் ரணில் விக்ரமசிங்கவின் ஆசனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தனுக்கு அருகில் மாற்றுமாறு யோசனை முன்வைத்துள்ளார்.

No comments