பஸில் வருகை பற்றி கோத்தாவே அறிவிப்பார்?

 
இலங்கை அரசியலில் கோத்தபாய மற்றும் மகிந்த இருவரும் தூக்கிவீசப்பட்ட நிலையில் மக்கள் அதிருப்தியை போக்க பசிலின் வருகையை பிரச்சாரப்படுத்துவதில் தெற்கில் முனைப்பு காட்டப்பட்டுவருகின்றது. எனினும் பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற பிரவேசம் அல்லது அமைச்சர் பதவிப்பிரமாணம் குறித்து அரசாங்கம் என்ற ரீதியில் எந்தவித தீர்மானத்தையும் இதுவரை மேற்கொள்ளவில்லையென்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபகஸ்விற்கு நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பொறுப்பு வழங்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இது நாடு சப்பந்தப்பட்ட முக்கிய விடயம் என்பதினால் இவ்வாறு நடைபெறவுள்ளதா அல்லது உங்களுக்கு தெரிவிக்கப்படவில்லையா? என்பது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார்.

பத்திரிகைகளில் குறிப்பிடப்படும் விடயங்களைக்கொண்டு கேள்வி எழுப்புவது பொருத்தமான விடயமல்ல. அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வது ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரமாகும். அவ்வாறு மாற்றங்கள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருந்தால் அது குறித்து ஜனாதிபதி எமக்கு அறிவிப்பார் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


No comments