கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது!!


அம்பாறை திருக்கோவில் வெசாக் தினத்தில் கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை இன்று (26) 24 லீற்றர் கள்ளுடன் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய விநாயகபுரம் பிரதேசத்தில் சம்பவ தினமான இன்று புதன்கிழமை காவல்துறையினர் முற்றுகையிட்டனர்.

இதன்போது கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட 41 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 3 கலனில் 24 லீற்றர் கள்ளை மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments