முள்ளிவாய்க்கால்:மீண்டும் சைபர் பிரிவு முடக்கியது?


Late News

இலங்கையின் சுகாதார அமைச்சு, ரஜரட்ட பல்கலைக்கழகம் மற்றும் இலங்கையில் உள்ள சீனத் தூதரக இணையத்தளங்கள் மீது இணைய வழித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இணையத்தளங்கள் மீண்டும் வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கணனி அவசரத் தரவு மையம் அறிவித்துள்ளது. மே 18 இல் இணையத்தாக்குதல் இடம்பெறலாம் என இலங்கை கணனி அவசர தரவு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒப்பிரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் நான்காம்  தடவையாக இலங்கை அரசினதும் சீன தூதரகத்தினதும் இணையங்கள் முடக்கப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சு,ரஜட்ட பல்கலைக்கழகம், சீனத்தூரகம் ஆகிய  இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலை தமிழீழம் சைபர் போர்ஸ் பொறுப்பேற்றுள்ளது.

மே18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் சிறிலங்காவின் அமைச்சரவை அலுவலக குடியரசு இணையம் , தூதுவராலய இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களை ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைப் படங்களை பதிவேற்றியும் அதை நாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017ஆம் ஆண்டு, 2018ஆம் ஆண்டு, 2019ஆம் ஆண்டு மற்றும் 2020ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதியில் இணையத்தளங்களை தமிழீழம் சைபர் போர்ஸ் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.No comments