எதிர்வரும திங்கள் முதல் அத்தியாவசியமற்றக் கடைகள் மீண்டும் திறப்பு!


இங்கிலாந்தில்  கொவிட் கட்டுப்பாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (12.03.21) தளர்த்தப்படுகிறது என பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.

பிரித்தானியப் பிரதமர் டவுனிங் தெருவில் ஊடகச் சந்திப்பில் அவர் இக்கருத்தினை அவர் எச்சரிக்கையுடன் வெளியிட்டுள்ளார்.

திட்டமிட்டபடி அத்தியாவசியமற்ற கடைகள், உடற்பயிற்சி கூடங்கள், சிகையலங்கரிப்பு நிலையங்கள், உணவகங்கள், மது அருந்தகங்கள், எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கலாம் என்றார்.

மே 17 ஆம் திகதி கட்டுப்பாடுகளின் அடுத்த தளர்வாக சர்வதேச பயணங்களை மீண்டும் தொடங்கலாம் என அரசாங்கம் நம்புகிறது எனக் கூறினார்.


No comments