காவல்துறைக்கு கத்தி குத்து!

 


பசறை நகரில் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் இருந்த அங்காடியில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்டதால் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அவ்விடத்திற்கு சென்று பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என்று கூறிய போது கையில் வைத்திருந்த கூரிய ஆயுதத்தால் அந்நபர் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளார்.

இதன்போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரை அயலவர்கள் உதவியுடன் பசறை  வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

சந்தேக நபரைஸபசறை பொலிஸார் கைது செய்து. மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments