இணைய ஊடகங்களை முடக்க இலங்கையில் சட்டம்!இலங்கை அரசு சத்தம் சந்தடியின்றி ஊடகங்களை முடக்க மும்முரமாக செயற்பட்டுவருகின்றது.

இதன் ஒரு கட்டடமாக இணையத்தில் போலி பிரசாரம், போலிச் செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக  சட்டத்தைத் திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறிவிப்புக்களை விடுத்துள்ளது.

இணையத்தில் போலி பிரசாரத்தைப் பரப்புபவர்களுக்கெதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு குற்றவியல் தண்டனைக் கோவை திருத்தப்படவுள்ளது.

இத்திருத்தமானது, பொதுமக்கள் அமைச்சர் சரத் வீரசேகரவால் முன்மொழியப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையில் இப்போதிருக்கும் சட்டமானது திருத்தப்படவுள்ளதாக, வீரசேகர,  தெரிவித்துள்ளார்.

No comments